செய்திகள் மலேசியா
மேக விதைப்பு நடவடிக்கை இன்று முதல் வியாழக்கிழமை வரை செயல்படுத்தப்படுகிறது
கோலாலம்பூர்:
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைச்சு (என்.ஆர்.ஈ.எஸ்.), மலேசிய வானிலை ஆய்வுத் துறையுடன் (மெட்மலேசியா ), தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), அரச மலேசிய விமானப்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், நாட்டைப் பாதித்து வரும் வெப்பமான வானிலையை எதிர்கொள்ளும் வகையில், இன்று முதல் வியாழக்கிழமை வரை மேக விதைப்பு நடவடிக்கையை (ஓ.பி.ஏ.) செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப், உள்நாட்டு, விவசாய நீர் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, பேராக், கெடா, பெர்லிஸ், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளுக்கு ஓ.பி.ஏ. சிறப்புக் கவனம் செலுத்தும் என்றார்.
நேற்றைய வானிலை அறிக்கையின் படி, கெடாவில் உள்ள கோத்தா செத்தார் தற்போது இரண்டாம் நிலை வெப்ப அலையில் உள்ளது. அங்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மேல் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது என்றார் அவர்.
"கூடுதலாக, பெர்லிஸ், கெடா, கிளாந்தான், பேராக், பஹாங், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகள், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிகபட்ச தினசரி வெப்பநிலை காரணமாக முதல் நிலை (எச்சரிக்கை) நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த முறையான ஓ.பி.ஏ. குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்தர், இந்த நடவடிக்கைகளின் முதன்மை நோக்கம், சம்பந்தப்பட்ட மூலோபாய அணைகளில் நீர் மட்டத்தை உயர்த்துவதும், காடுகள், கரி நில தீ அபாயத்தைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஈரப்பதத்தை வழங்க உதவுவதும் ஆகும் என்றார்.
"எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை குறிப்பாக பொருத்தமான குமுலஸ் மேகங்கள் இருப்பது, குறைந்த காற்றின் வேகம் போன்ற சாதகமான வளிமண்டல நிலைமைகளைப் பெரிதும் சார்ந்துள்ளது என்பதை அமைச்சு வலியுறுத்த விரும்புகிறது.
"மெட்மலேசியாவின் தொழில்நுட்பக் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கக்கூடிய துல்லியமான இலக்கு இடங்களைத் தீர்மானிப்பதற்காக, வானிலை நிலைமைகளை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து வரும்" என்று அவர் கூறினார்.
அதன்படி, மதிய வேளைகளில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது, போதுமான நீர் உட்கொள்ளலை உறுதி செய்வது, வெப்பமான வெயிலின் கீழ் இருக்கும்போது தொப்பி அல்லது குடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் அவர்.
"அனைத்து மக்களும் நியாயமான முறையில் தண்ணீரைப் பயன்படுத்தவும், காற்றின் தரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
"இந்த வெப்பமான வானிலையின் தாக்கத்தைக் கண்காணிக்க அமைச்சு மாநில அரசுகள், தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக ஒத்துழைத்து வரும். அதே நேரத்தில், சமீபத்திய தகவல்களை 'myCuaca' பயன்பாடு அல்லது மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் காணலாம்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 11:21 pm
ஐஜேஎம்மை கையகப்படுத்த சன்வே நிறுவனம் தவறியது
April 6, 2026, 8:56 pm
முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது: அளித்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றியது
April 6, 2026, 6:01 pm
அடையாள அட்டையை மற்றவர்களிடம் கொடுப்பது சட்டப்படி குற்றமா?: ஜேபிஎன் இயக்குனர் விளக்கம்
April 6, 2026, 5:32 pm
தங்க வேட்டையில் உள்ளூர் பட்டதாரிகள்
April 6, 2026, 4:19 pm
மத்திய கிழக்கு பதற்றம்: கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தும் ஏர்ஏசியா எக்ஸ்
April 6, 2026, 3:42 pm
