நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த துன் டாய்ம்மின் மூன்று பிள்ளைகள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்?

கோலாலம்பூர்:

முன்னாள் நிதியமைச்சர், காலஞ்சென்ற துன் டாய்ம் ஜைனுடினின் மூன்று பிள்ளைகள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்னிடா மீது நாளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 36(2)-இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

அதேசமயம் காலஞ்சென்ற டாய்ம்மின் மற்ற இரண்டு பிள்ளைகள் மீது அவர் இல்லாத நிலையில், அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாமல், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அந்தக் குடும்பத்திற்கு நெருங்கிய அறிமுகமான ஒரு நபர் மீதும் குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset