நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தை கண்காணிப்பதற்காக அரசாங்கத்தின் சிறப்புப் பணிக்குழுவின் தலைவராக டான் ஸ்ரீ முஹம்மது ஹசன் மரிகான் நியமனம் 

புத்ராஜெயா:

மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தை, குறிப்பாக எரிபொருள், உணவு போன்ற நாட்டின் முக்கிய விநியோகப் பொருட்களின் மீது கண்காணிப்பதற்காக, மலேசிய அரசாங்கம் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. அதன் தலைவராக டான் ஸ்ரீ முஹம்மது ஹசன் மரிகான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, உலகளாவிய விநியோகத் தடைகளின் அபாயத்திற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழுவின் (MTEN) கீழ் நெருக்கடி மேலாண்மைப் பணிக்குழுவை நிறுவியதன் மூலம் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset