செய்திகள் உலகம்
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
டெஹ்ரான்:
அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வளைகுடா மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 11:38 am
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஹோர்முஸ் நீரிணையை நீண்ட காலத்திற்கு மூட ஈரான் முடிவு
April 3, 2026, 4:12 pm
பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி
April 3, 2026, 3:55 pm
சில மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்கிறார் டிரம்ப்
April 3, 2026, 1:37 pm
பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ - மனதை ரணமாக்கும் காசா வாழ் மழலைகளின் காணொலி
April 2, 2026, 6:24 pm
அமெரிக்கா வருத்தப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும்: தளபதி காத்தம் அல்-அன்பியா
April 2, 2026, 3:16 pm
