நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவை மீட்டெடுக்க 'Reset' பட்டனை அழுத்துவோம்: ஹம்சா முன்வைக்கும் தீர்வு

கோலாலம்பூர்: 

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலைத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள நாட்டைத் தயார்படுத்துவதற்காக, உடனடியாகத் தயாரிப்புகளைச் செய்து, ஒரு அவசரகாலத் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரும், கெரிக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்திய தாக்குதல்கள் இப்போது வளைகுடாப் பகுதியில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இது உலகப் பொருளாதாரத்தையும் மலேசியாவையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறினார்.

"இந்த நிலை தொடர்ந்தால், மலேசியப் பொருளாதாரம் பாதிக்கப்படும். பொருட்களின் விலை உயரும், பணவீக்கம் அதிகரிக்கும், இறுதியில் மக்கள் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

"இத்தகைய நேரத்தில் தான் நமக்கு ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது தெளிவான திசையையும், தனது முடிவெடுப்பதில் முதிர்ச்சியையும் கொண்டிருப்பதோடு மேலும் மக்களுக்கும் நாட்டிற்கும் முன்னோக்கிச் செல்ல ஒரு வழியைக் கண்டறியத் தெரிந்திருக்க வேண்டும்.

"மக்களும் நாடும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களைச் சந்திக்க முடிந்திடும் வகையில், ஒரு அவசரகாலத் திட்டத்தை முன்வைத்து உடனடித் தயாரிப்புகளைச் செய்வதன் மூலம் அரசாங்கம் தனது சிறந்ததைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் இன்று மாலை தன் முகநூலழ பதிவில் தெரிவித்துள்ளார்.

எனவே, தேசத்தின் எதிர்காலத்திற்கான ஒரு விரிவான நடவடிக்கையாக 'மீட்டமைப்பு' அணுகுமுறையைச் செயல்படுத்த அவர் முன்மொழிந்தார்.

"இந்த 'மீட்டமைப்பு' செயல்திட்டம் எந்தவொரு தனிநபர் அல்லது கட்சியின் அரசியல் இருப்புக்காகவும் அல்லாமல் தேசத்தின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு விரிவான, அனைவரையும் உள்ளடக்கிய போராட்டமாக இருக்க வேண்டும்.

"மிக முக்கியமாக, இது 'பல்டத் அன் தய்யிபாத்துன் வ ரப்பல் கஃபூர்' என்ற அரசை - அதாவது அல்லாஹ்விடம் மன்னிப்பையும் ஆசீர்வாதங்களையும் பெறும் ஒரு நல்ல, செழிப்பான தேசத்தை நிறுவுவதற்கான மகசிட் ஷரியாவின் அணுகுமுறையுடன் ஒத்துப்போக வேண்டும்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மேற்காசியாவில் நிலவும் மோதலில் தொடர்ந்து ஒடுக்கப்படும் பாலஸ்தீனிய மக்களின் துன்பங்களை, பண்டிகைக் காலத்தின் மத்தியிலும் மலேசியர்கள் மறந்துவிட வேண்டாம் என்று ஹம்சா நினைவூட்டினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset