செய்திகள் மலேசியா
பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது எண்ணெய் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பிரதமர்
பெர்மாத்தாங் பாவ்:
நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உலகளாவிய பதட்டங்களால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தபோதிலும், உயர்ந்து வரும் எண்ணெய் விலை பிரச்சினையைத் தொடர்ந்து அரசியல்மயமாக்கும் சில கட்சிகளின் நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
சர்வதேச மோதல்களைத் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களிடையே அமைதியின்மையை உருவாக்க அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது.
மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் மோதலுடன் தற்போதைய உலக எண்ணெய் விலை உயர்வு நெருங்கிய தொடர்புடையது.
இது எண்ணெய், எரிவாயு வசதிகளையும் பாதித்து, அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் உற்பத்தி தேக்கமடைந்துள்ள இந்தச் சூழ்நிலையை இன்னும் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இது எங்கள் தவறல்ல, இது உலகப் போரின் பிரச்சினை.
ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எங்களைச் சபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசியல் உலகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:46 pm
நோன்பு பெருநாளை எளிமையாகக் கொண்டாடுங்கள்; துன்பப்படுவோருக்கு உதவுங்கள்: பிரதமர்
March 20, 2026, 9:44 pm
ஷவ்வால் முதல் மாதத்தில் மக்களிடையே நெருங்கிய உறவு மேலும் வலுப்பெற வேண்டும்: ஜாஹித்
March 20, 2026, 9:01 pm
வேற்றுமைகளை மறந்து ஒன்றாக கைகள் கோர்த்து நோன்பு பெருநாளை கொண்டாடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 20, 2026, 9:00 pm
நோன்புப் பெருநாள் இதயங்களை இணைக்கும்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை: டத்தோஶ்ரீ ரமணன்
March 20, 2026, 8:59 pm
நோன்பு பெருநாளை இணைந்து கொண்டாடுவோம்; அன்பைப் பகிர்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
March 20, 2026, 8:58 pm
நோன்பு பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரட்டும்: டத்தோ சரவணக்குமார்
March 20, 2026, 5:46 pm
"மக்களோடு மக்களாக பிரதமர்": புக்கிட் மெர்தாஜாம் வருகையில் உற்சாக வரவேற்பு
March 20, 2026, 5:45 pm
புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயம்
March 20, 2026, 5:43 pm
