நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷவ்வால் முதல் மாதத்தில் மக்களிடையே நெருங்கிய உறவு மேலும் வலுப்பெற வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அன்பைப் பரப்புவதையும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதையும் தொடர வேண்டும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இந்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு மாத நோன்புக்குப் பிறகு கொண்டாடப்படும் ஷவ்வால் மாதம், உறவுகளை வலுப்படுத்தவும், ஒருவரையொருவர் மனதார மன்னிக்கவும், குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதை மதிக்கவும் சிறந்த வாய்ப்பாக அமைய வேண்டும்.

ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்புக்குப் பிறகு ஷவ்வால் மாதம் நம்மை வரவேற்கத் திரும்பி வந்துள்ளது.

இந்த நல்வாய்ப்பில், நானும், என் மனைவி, முழு குடும்பத்தினரும், துணைப் பிரதமர் அலுவலகம்,  அமைச்சின் பணியாளர்களும் என அனைவரும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் இனிய பெரு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஷவ்வால் மாதம் நம்.அனைவருக்கும் ஆசீர்வாதங்களையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset