செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளை இணைந்து கொண்டாடுவோம்; அன்பைப் பகிர்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
நோன்பு பெருநாளை இணைந்து கொண்டாடுவோம். அன்பைப் பகிர்வோம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் வாழ்த்துச் செய்தி இதனை கூறினார்.
நூற்றாண்டுகளாக ஒற்றுமை, பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கி வரும் மலேசிய சமூகத்தில், நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் என்பது ஒட்டுமொத்த மலேசியர்களின் கொண்டாட்டமாக விளங்குகிறது.
ஒரு மாத காலம் நோன்பு இருந்து ஹரி ராயாவை அமர்க்களமாகக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.
மலேசியர்கள் என்றாலே பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டு.
குறிப்பாகப் பெருநாள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பு என்ற உயர்ந்த பண்பாட்டின் மூலம், ஒருவருக்கொருவர் இல்லங்களில் அன்பையும், உணவையும் பகிர்ந்து கொள்ளும் மரபு, உலகில் அரிதாகக் காணப்படும் மனிதநேயத்தின் வெளிப்பாடாகும்.
ஒரு சிலரின் தூண்டுதலாலும் அரசியல் நோக்கங்களாலும் ஏற்படும் சிறிய மோதல்கள், இந்த நாட்டின் ஆழமான ஒற்றுமை உணர்வை எப்போதும் குலைக்க முடியாது.
புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல், அன்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை மலேசியர்களின் இயல்பான பண்புகளாகவே தொடரும்.
காடும் மேடுமாக இருந்த இந்த நிலத்தை ஒரு முன்னேற்ற நாடாக மாற்றியதில் அனைத்து இனத்தினருக்கும் சமமான பங்கு உண்டு. மலாய் சமூகத்தின் அரவணைப்பும் புரிந்துணர்வும் மற்ற சமூகங்களை இணைத்துச் சென்றது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
எந்தவித தீய சக்திகளும் நம்மிடையே வேரூன்றியுள்ள இந்த நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இன்பமான சூழலை உருவாக்கி, நம் பாரம்பரியத்தைப் பாதுகாத்து முன்னேறுவோம்.
இந்த புனிதமான நோன்புப் பெருநாளின் நன்னாளில், மலேசியாவில் உள்ள அனைத்து மலாய் நண்பர்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:46 pm
நோன்பு பெருநாளை எளிமையாகக் கொண்டாடுங்கள்; துன்பப்படுவோருக்கு உதவுங்கள்: பிரதமர்
March 20, 2026, 9:44 pm
ஷவ்வால் முதல் மாதத்தில் மக்களிடையே நெருங்கிய உறவு மேலும் வலுப்பெற வேண்டும்: ஜாஹித்
March 20, 2026, 9:42 pm
பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது எண்ணெய் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பிரதமர்
March 20, 2026, 9:01 pm
வேற்றுமைகளை மறந்து ஒன்றாக கைகள் கோர்த்து நோன்பு பெருநாளை கொண்டாடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 20, 2026, 9:00 pm
நோன்புப் பெருநாள் இதயங்களை இணைக்கும்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை: டத்தோஶ்ரீ ரமணன்
March 20, 2026, 8:58 pm
நோன்பு பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரட்டும்: டத்தோ சரவணக்குமார்
March 20, 2026, 5:46 pm
"மக்களோடு மக்களாக பிரதமர்": புக்கிட் மெர்தாஜாம் வருகையில் உற்சாக வரவேற்பு
March 20, 2026, 5:45 pm
புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயம்
March 20, 2026, 5:43 pm
