செய்திகள் மலேசியா
முந்திச் சென்றது ஒரு குற்றமா?: பள்ளிவாசலில் இருந்து திரும்பியவரைச் சித்திரவதை செய்த கும்பல்
ஜொகூர் பாரு:
கூலாய், கம்போங் புக்கிட் பாத்துவில் உள்ள தற்காலிக பள்ளிவாசலில், ஒரு குழுவினர் தடியால் தாக்கியதில் உள்ளூர்வாசி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.50 மணியளவில், 33 வயதான பாதிக்கப்பட்டவர் மசூ பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் தான் செங் லீ தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர் ப்ரோட்டோன் சாகா ரக காரை முந்திச் சென்றதன் விளைவாக இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது."
"அந்த கார் ஒரு பொறுப்பற்ற முறையில் திடீரென வளைத்து, பாதிக்கப்பட்டவரின் முன்பாக வந்து, திடீரென நின்றதால், அவர் கடுமையாக பிரேக் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது."
"காரில் இருந்து நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் இறங்கி அவர்களில் ஒருவர் கட்டையால் பாதிக்கப்பட்டவரின் தலையில் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். மற்ற சந்தேக நபர்கள் அந்த நபரை மிதித்த பிறகு, அவரது மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டன. அவரது உடலின் பல பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டன.
சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும், அபாயகரமான ஆயுதம் அல்லது அபாயகரமான பொருளைக் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காகவும் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 279, 324-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கூலாய் IPD ஹாட்லைன் எண் 07-6632222 அல்லது விசாரணை அதிகாரி, ஆய்வாளர் ஆர். ஹரிநாதை 017-5005731 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் மூலமே இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். மேலும், இது காவல்துறை விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இதுகுறித்து ஊகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 2:40 pm
சவுத்கீ பகுதில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் சிங்கப்பூரில் கைது
March 20, 2026, 2:18 pm
இன்று மாலை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
March 20, 2026, 12:40 pm
அரசாங்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் கைது
March 20, 2026, 12:38 pm
"பண்டிகை உங்களுக்கு... மரண பயம் அவற்றுக்கா?": பெட்டிகளில் அடைத்து சந்தைகளில் வீசப்படும் பூனைகள்
March 20, 2026, 11:09 am
