நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஒமிக்ரானை கண்டறியும் கருவியை உருவாக்கியது இந்தியா

புது டெல்லி:

ஒமிக்ரான் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உருவாக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலம், திப்ரூகரில் உள்ள ஐசிஎம்ஆர் கிளை இந்தப் புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.

கொரோனாவை கண்டறிய உதவும் ஆர்டி -பிசிஆர் கருவியைப் போலவே ஒமிக்ரானை கண்டறியும் கருவியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR designs kit for Omicron detection, invites EOI for commercialisation -  BusinessToday

"இந்தப் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஐசிஎம்ஆர் உரிமையாளராக இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை கருவிகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"இதற்கு முன்வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியில் கருவிகள் தயாரிக்கப்படும்" என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset