செய்திகள் தமிழ் தொடர்புகள்
டாலருக்கு நிகரான இந்திய ருபாய் வீழ்ச்சி: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை உயர்ந்து ரூ1,899.50க்கு விற்பனை
சென்னை:
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ1,899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.
ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் ஏறக்குறைய 92 வரை வீழ்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 7:59 am
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தகிக்கும் வெப்ப அலை வீசும்: பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
March 31, 2026, 7:16 am
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
March 30, 2026, 6:34 pm
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
March 30, 2026, 6:09 pm
காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
March 29, 2026, 6:45 pm
700 ஆண்டுகாலத் தமிழரின் அடையாளம்: பழமையான பாலத்தை அகற்ற முயன்ற நீர்வளத் துறைக்கு எச்சரிக்கை
March 29, 2026, 2:47 pm
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி
March 29, 2026, 10:14 am
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
March 28, 2026, 8:45 pm
