செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்துவதை நிறுத்திய மருத்துவர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை நிறுத்தியுள்ளனர்.
‘முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து, அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம், 20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3,000 வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்குவது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதற்காக, பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் மருத்துவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர்.
அடுத்த கட்டமாக 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை அரசு மருத்துவர்கள் தற்போது நிறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 7:59 am
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தகிக்கும் வெப்ப அலை வீசும்: பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
March 31, 2026, 7:16 am
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
March 30, 2026, 6:34 pm
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
March 30, 2026, 6:09 pm
காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
March 29, 2026, 6:45 pm
700 ஆண்டுகாலத் தமிழரின் அடையாளம்: பழமையான பாலத்தை அகற்ற முயன்ற நீர்வளத் துறைக்கு எச்சரிக்கை
March 29, 2026, 2:47 pm
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி
March 29, 2026, 10:14 am
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
March 28, 2026, 8:45 pm
