செய்திகள் தமிழ் தொடர்புகள்
உயர் நீதிமன்ற விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: வேலூர் மாவட்டக் காவல்துறை விளக்கம்
வேலூர்:
வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியதாக த.வெ.க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், த.வெ.க-வினர் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் விதமாக வேலூர் மாவட்டக் காவல்துறை பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ``த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக மனு அளித்தபோதிலும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22-2-2026-ம் தேதி காவல்துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல், மனு அளிக்கப்பட்ட நான்கு நாள்களிலேயே உரிய அனுமதியும் வழங்கப்பட்டது.
த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `காவல்துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதமாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள், தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறியதாகும்.
எனினும், காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
