செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார்
சென்னை:
ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. கடந்த ஆக.22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் ஐ சி யுவுக்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து உறவினர்கள், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு உடன் இருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
