செய்திகள் தமிழ் தொடர்புகள்
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
சென்னை:
2016 ஆம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்ட பொழுது அதன் அபரிமித வளர்ச்சியில் சமூக வலைதள செயல்பாட்டாளர்களின் பங்கு முதன்மையானதாகும்.
மஜகவின் வலைதள அறிவரங்கம் அக் கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி தலைமையில் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் அறிவுப்பூர்வமாகவும் வழிநடத்தப்பட்டது.
சிறிய, பெரிய கட்சிகள் தங்களுக்கு என்று சமூக வலைதள பயன்பாடுகளுக்காக தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்காத காலகட்டத்தில், இப்படி ஒரு அணியை உருவாக்கி நெறிப்படுத்தி இதன் முக்கியத்துவத்தை பலருக்கும் உணர்த்திய கட்சி தான் மஜக என்று தனது தலைமை உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார் அன்சாரி.
ஒரு பத்திரிக்கையை படிக்கும் உணர்வோடு செய்திகளை எவ்வாறு தயாரிப்பது? அதை எந்தெந்த வடிவங்களில் வலைதளங்களில் பரப்புவது? என்ற வித்தையை செயல்படுத்தி வெற்றி கண்ட கட்சி மஜக என்பது பலருக்கும் தெரியும்.
இன்று தமிழ்நாட்டை கடந்து உலகம் என்றும் வாழும் தமிழ்நாட்டு வம்சாவளியினரிடையே செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி திகழ்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டை முன்னிட்டு, சமூகவலைதள செயல்பாட்டாளர்களின் ஒன்று கூடல் ஆலோசனைக் கூட்டம் ராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.
காலை 11:30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் மாலை 5.30 வரை அறிவுசார் கலந்துரையாடல்களுடன், கருத்தாளர்களின் வழிகாட்டலுடன் எழுச்சியாக நடந்து முடிந்தது.
இதில் கட்சியில் புதிதாக சமூக வலைதளங்களில் பணியாற்ற விரும்பும் மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களும் இவர்களோடு இணைந்து இருந்தனர்.
இதில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகர் திரு. கோ.வி.லெனின், திமுக செய்தி தொடர்பு துறையின் மாநில துணைச் செயலாளர் டாக்டர் ஹபிசுல்லாஹ் ஆகியோர் காலை அமர்வில் வகுப்பெடுத்தனர்.
மதியம் ஒரு மணி அளவில் சிறப்பு ஜும்மா தொழுகையின் போது, 'ஊடகத்துறையில் ஏன் செயலாற்ற வேண்டும்? என்ற தலைப்பில் டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.
இந்நிகழ்வில் கட்சியில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத இதர சமூகங்களை சேர்ந்த நிர்வாகிகள் பார்வையாளராக அமர்ந்து கவனித்தனர்.
இரண்டாவது அமர்வின் தொடக்கமாக, மலேசியாவில் இருந்து வெளிவந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் செல்வாக்குடன் திகழும் ' நம்பிக்கை ' ஊடகத்தின் இயக்குனர்.கசாலி வகுப்படுத்தார்.
அதைத்தொடர்ந்து பிரபல ஊடகவியலாளர் செந்தில்வேல் வகுப்பெடுத்தார்.
நிறைவாக டெல்லியில் இருந்து வருகை தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பகுஜன் திராவிட கட்சியின் தலைவருமான சர்தார் ஜீவன் சிங் அவர்கள் வகுப்பெடுத்தார்.
இவர்கள் அனைவரின் உரைகளின் போது, கேள்வி - பதில்களும், அவர்களின் வகுப்பு தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றது.
உரைகளுக்கு மத்தியில் டிஜிட்டல் ஸ்லைடு மூலம் காட்சிகள் - கருத்துகள் தெளிவுப்படுத்தப்பட்டது.
நிறைவாக முகநூல், youtube , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் செயல்படும் யுக்திகள் குறித்தும் தகவல் தொழில் நுட்ப அணி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக ட்விட்டர் எனப்படும் x தளம் அரசியல் கருத்து உருவாக்கத்தின் மையமாக இருப்பதால், முகநூலிலேயே அதிகமாக இயங்குபவர்கள், இனி டுவிட்டரின் பங்களிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் அதில் கணக்குகள் தொடங்கி தரப்பட்டது.
அதன் பிறகு ஊடகவியலருடன் இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.
மஜக வின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், சார்பு இணையதளங்கள் ஆகியவை குறித்த விபரங்களையும் அதில் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியின் இலட்சிணையை அவர் வெளியிட, ஊடகவியளர் செந்தில் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த பயிலரங்கு தொடங்கிய அதே உற்சாகத்துடன் இறுதிவரை நீடித்தது.
சந்தேகங்களை தெளிவுறுதல், புத்தாக்க உணர்வு பெறல், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகுதல் என உற்சாகமாக கூட்டம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
