நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் மயக்கம்

சென்னை: 

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சார்ந்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்றது. 

அப்போது திமுகவிடம் ஐந்து தொகுதிகளை கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

திமுகவின் மரபின்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு முதல் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். 

ஐயுஎம்எல் சார்பில் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை காதர் மொகிதீன் சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது: “திமுக கூட்டணியை மேலும் பலமடைய செய்யும் வகையில் சில புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. நாங்கள் ஐந்து தொகுதிகளை திமுகவிடம் கேட்டோம்.

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள காரணத்தால் தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என திமுக தெரிவித்தது. இதையடுத்து 5 தொகுதிகள் இல்லையென்றால் 4 தொகுதிகளாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவர் மயக்கமடைந்தார். அவருடன் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அண்ணா அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். ரமலான் மாதத்தையொட்டி முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். அதன் காரணமாக அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset