நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி:

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்துச் செல்கிறது.

இதனால், ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியதால் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து சுமார் 15,250 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11,060 கன அடி தண்ணீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset