நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை

கோத்தாபாரு:

கிளந்தானில் இன்று தொடங்கி திங்கட்கிழமை வரை 5 மாவட்டங்களை பாதிக்கும் தொடர்ச்சியான கடுமையான மழை  பெய்யும்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தும்பட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக், பாசிர் புடிஹ் ஆகிய மாவட்டங்கள் இம்மழைக்கு பாதிக்கப்படும்.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா (கெரியன், லாரூட், மாத்தாங் செலாமா, ஹுலு பேரா, கோல  கங்சார்) ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய, நவம்பர் 24 ஆம் தேதி வரை எச்சரிக்கை அளவில் தொடர் மழை எச்சரிக்கை இன்று அமலில் இருக்கும்.

இந்த புதன் (நவம்பர் 26) வரை கிளந்தான் (ஜெலி, தனாஹ் மேரா, மச்சாங், கோல கிராய், குவா மூசாங்), திரெங்கானு ஆகிய இடங்களுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மெட் மலேசியா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset