நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்

ஹட்யாய்:

தாய்லாந்தின் ஹட்யாயில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள், தங்களுக்கு உதவ தூதரகத்திடம் உதவி கேட்டுள்ளனர்.

ஹட்யாயில் உள்ள சியாம் ஓரியண்டல் ஹோட்டலில் தங்கியுள்ள லில்லி சுரைனி என்ற பெண், தனது முகநூல் மூலம் தூதரகம் மற்றும் பொதுமக்களிடம் உதவி கேட்டார்.

இதில் இரண்டு, நான்கு வயதுடைய தனது இரண்டு குழந்தைகளுக்கு பால் பொருட்கள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் டயப்பர்கள் உட்பட பல உதவிகளை கேட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி பேட்டரி தீர்ந்து போகும் நிலையில் உள்ளது.

அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டதால் எங்களுக்கு உதவி தேவை.

உயிர்வாழ உணவு, மினரல் வாட்டர் தேவை என அவர் உதவி கேட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset