செய்திகள் மலேசியா
கம்போடியாவில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
சியாம் ரெப்:
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று இந்த கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த மாநாட்டில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் தலைமையில் மலேசிய பேராளர் குழு கலந்து கொண்டுள்ளது.
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை கம்போடியா சியாம் ரீப்பில் நடைபெறவுள்ளது.
அங்கோர் தமிழ்ச் சங்கமும் தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகப் பேரரசன் இராஜேந்திர சோழன் கடாரம் வென்ற 1000ஆவது ஆண்டு விழா இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது.
உலக நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலையில் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டும் வகையில் மேளதாளம் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் அதிகாரப்பூர்வமாக தொடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 10:03 pm
கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 22, 2025, 2:09 pm
நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்
November 22, 2025, 2:08 pm
தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி
November 22, 2025, 11:33 am
கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்: போலிஸ்
November 22, 2025, 11:18 am
மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் கூடினர்
November 22, 2025, 10:58 am
