நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் பண்டார் செந்தோசாவிற்கு புதிய அடையாளம் கொடுக்கப்படும்: குணராஜ்

செந்தோசா:

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பதுடன் பண்டார் செந்தோசாவிற்கு புதிய அடையாளம் கொடுக்கப்படும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

தாமான் செந்தோசா தற்போது பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு புதிய அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் எந்த நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் இத்தொகுதியில் இன்னும் ஒரு சில பிரச்சினைகள் உள்ளன.

மக்கள் எதிர்நோக்கும் அப்பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும்.

செந்தோசா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதி அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, நவம்பர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிள்ளான், பண்டார் செந்தோசாவில் உள்ள என்எஸ்கே பற்பொருள் அங்காடி முன்புறமான வாகன நிறுமிடத்தில் மேடை அமைத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கிள்ளான் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஹஜி அப்துல் ஹமிட் ஹுசைன், கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் அவர்களும் வருகை புரிந்தார்.

பல்வேறு ஆடல் - பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி இனிதே சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஏற்பாட்டு குழு தலைவர் ஞானெஸ்வரன் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset