நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி

கோலாலம்பூர்:

கடந்த 16 ஆண்டுகளாக மகள் பிரசன்னாவை பிரிந்து வாழும் தாயார் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்க மஇகா இளைஞர் அணி போராடும் என்று அதன் தலைவர் அர்விந்த் இன்று தெரிவித்தார்.

16 ஆண்டுகளாக மகள் பிரசான்னாவை மீட்க இந்திரா காந்தி போராடி வருகிறார்.

ஆனால் பிரசான்னாவை போலீசார் இன்னும் கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வில்லை.

இது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

ஆகவே இந்திரா காந்தி விவகாரத்தில் மலேசிய போலீசார் தீவிரமாக களம் இறங்கி பிரசான்னாவை கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்திரா காந்திக்கு நீதி கிடைக்க இன்று தலைமையில் நடைபெற்ற பேரணியில் ம இகா இளைஞர் அணியின் துணைத் தலைவர் கேசவன், ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் உட்பட மகளிர், இளைஞர் அணியினர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset