நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

சென்னை: 

புகழ்பெற்ற கவிஞர் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

'வணக்கம் வள்ளுவ' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ வகை கவிதையை தமிழில் பிரபலப்படுத்திய கவிஞர் ஆவார்.

சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

நம்பிக்கை இரண்டாவது ஆண்டுவிழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கோலாலம்பூர் டி பி.கே எல் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து சிறப்பாக சொற்பொழிவாற்றியவர். நம்பிக்கையை விரும்பி வாசிப்பவராக மட்டுமல்லாமல் தமது கவிதைகளையும் தந்து அலங்கரித்தவர். 

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம்பிக்கையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset