நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியாஸ்க்கு மூன்று ஆட்டங்களில் களமிறங்க தடை

முனிச்:

பாயர்ன் முனிச் ஆட்டக்காரர் லூயிஸ் டியாஸ்க்கு மூன்று ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியினர் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தின் போது பாயர்ன் முனிக் அணியின் ஸ்ட்ரைக்கர் லூயிஸ் டியாஸ்க்கு கடுமையான ஃபவுல் காரணமாக சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இதைத்  தொடர்ந்து, அவருக்கு மூன்று போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாயர்ன் முனிச்சின் இரண்டு கோல்களையும் அடித்த டயஸ், போட்டியின் முதல் பாதியின் பிற்பகுதியில் அக்ராப் ஹகிமியை கடுமையாக தாக்கியதற்காக சிவப்பு அட்டை வழங்கியதன் மூலம் வெளியேற்றப்பட்டார்.

இதை அடுத்து, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset