நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி சாதிக்கும்: பத்துமலை நம்பிக்கை

கிள்ளான்:

மீபாவின் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி சாதிக்கும்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.

மீபாவின் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி நவம்பர் 22ஆம் தேதி சிரம்பான் ஐஆர்சி அரங்கில் நடைபெறவுள்ளது.

இக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணியில் இருந்து மூன்று அணிகள் களமிறங்கவுள்ளன.

இரு ஆண்கள் அணியும் இரு பெண்கள் அணியும் இப்போட்டியில் களமிறங்கவுள்ளன.

சிலாங்கூர் இந்தியர் கால்பந்து சங்கத்துடன் இணைந்து பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் இந்த அணிகளை அனுப்புகிறது.

கடந்த ஆண்டு சிலாங்கூர் அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

ஆனால் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் சிலாங்கூர் அணியினர் இந்த போட்டிக்கு செல்கின்றனர்.

இதற்காக அணியின் ஆட்டக்காரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகவே இந்த போட்டியில் சிலாங்கூர் அணியினர் நிச்சயம் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இதன் அடிப்படையில் களம் இறங்கும் போட்டியாளர்களுக்கு ஜெர்சிகள் வழங்கப்பட்டது.

மேலும் சிலாங்கூர் மாநில கொடி வழங்கப்பட்டு அப் போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று பத்துமலை கூறினார்.

முன்னதாக இன்று நிகழ்வில் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு, பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர்கள் கென்னத் கண்ணா, குணா, செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset