செய்திகள் தமிழ் தொடர்புகள்
சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு
சேலம்:
சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக நிா்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரப் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையிலான நிா்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனா்.
அதில், டிசம்பர் 4-ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.
டிசம்பர் 4-ஆம் தேதி காா்த்திகை தீபம் என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து போலீஸாா் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தெரிவித்தாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 4:14 pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
November 19, 2025, 4:22 pm
சென்னையில் நகை வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
November 19, 2025, 3:19 pm
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
November 19, 2025, 3:01 pm
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
November 19, 2025, 2:03 pm
சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
November 18, 2025, 6:02 pm
பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: மருத்துவர்கள் அறிவுரை
November 17, 2025, 12:16 pm
சென்னையில் ஒரே நாளில் 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றம்
November 16, 2025, 9:25 am
நானும் தலைவர்தான்; எங்களையும் அழைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் வேண்டுகோள்
November 15, 2025, 3:53 pm
