நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி

லுவண்டா:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.

நோவெம்ரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் அங்கோலா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அங்கோலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்ஜெண்டினா அணியின் வெற்றி கோல்களை லாவ்தாரோ மார்டின்ஸ், லியோனல் மெஸ்ஸி ஆகியோர் அடித்தனர்.

முன்னதாக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்ததை அங்கோலா கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர்.

சாலையெங்கும் திரண்ட அவர்கள் அர்ஜெண்டினா ஆட்டக்காரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset