நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 IPL: சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே - ரவீந்​திர ஜடேஜாவை சென்னையிலிருந்து 14 கோடிக்​கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்குகிறது 

சென்னை: 

2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்​கான மினி வீரர்​கள் ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒவ்​வொரு அணி​யும் தக்க வைக்​கும் வீரர்​களை​யும், விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை வழங்கவும் நேற்று கடைசி நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து அனைத்து அணி​களும் விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை அறி​வித்​தன. சில அணி​கள் டிரேடிங் முறை​யில் வீரர்​களை மாற்​றிக்கொண்​டன.

இந்த வகை​யில் சென்னை சூப்​பர் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வீர​ரான சஞ்சு சாம்​சனை ரூ.18 கோடிக்கு வாங்​கியது. அதேவேளை​யில் சிஎஸ்கே அணி​யிடம் இருந்து ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி ஆல்​ர​வுண்​டர்​களான ரவீந்​திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்​கும், சேம் கரணை ரூ.2.4 கோடிக்​கும் வாங்​கி​யுள்​ளது.

கடந்த சீசனில் ரவீந்​திர ஜடேஜாவை சிஎஸ்கே ரூ.18 கோடிக்கு தக்​க​வைத்​திருந்​தது. இந்த தொகை​யை​விட ரூ.4 கோடிக்கு குறை​வாக அவரை ராஜஸ்​தான் அணி வாங்​கி​யுள்​ளது. ஜடேஜா, சிஎஸ்கே அணிக்​காக 12 சீசன்​கள் விளை​யாடி உள்​ளார். அனுபவம் வாய்ந்த அவர், 250 ஆட்​டங்​களுக்கு மேல் விளை​யாடி உள்​ளார்.

சஞ்சு சாம்​சன், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யில் கேப்​ட​னாக இருந்​தார். அவர், ஐபிஎல் தொடரில் 177 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளார். ராஜஸ்​தான் அணிக்​காக சஞ்சு சாம்​சன் 2013–2015, 2018–2025-ம் ஆண்​டு​களில் விளை​யாடி​னார். 2016–2017-ம் ஆண்டு சீசன்​களில் டெல்லி டேர்​டே​வில்ஸ் அணிக்​காக​வும் களமிறங்​கி​யிருந்​தார்.

சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்​காக விளை​யாடி வந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான முஹம்மது ஷமி டிரேடிங் முறை​யில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடம் மாறி​யுள்​ளார். அவரை ரூ.10 கோடிக்கு லக்னோ அணி வாங்​கி​யுள்​ளது.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​காக விளை​யாடிய ஆல்​ர​வுண்​ட​ரான நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு டெல்லி கேப்​பிடல்ஸ் அணி வாங்​கி​யுள்​ளது. அதேவேளை​யில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யில் இருந்து தென் ஆப்​பிரிக்க அணி​யின் டோனோவன் பெரை​ராவை ரூ.1 கோடிக்கு ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வாங்​கி​யுள்​ளது.

கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ரூ.23.75 கோடிக்கு வாங்​கிய வெங்​கடேஷ் ஐயரை விடு​வித்​துள்​ளது. மேலும் 2 முறை சாம்​பியன் பட்​டம் வென்ற அணி​யில் இடம் பிடித்​திருந்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான ஆந்த்ரே ரஸ்​ஸலை​யும் அந்த அணி விடு​வித்​துள்​ளது. அவரை, கொல்​கத்​தா அணி ரூ.12 கோடிக்​கு வாங்​கியிருந்​தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மதீஷா பதிரனா, டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஆந்த்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி, ராகுல் திரிபாதி, ஷெய்க் ரஷீத், வன்ஷி பேடி. கையிருப்பு தொகை: ரூ.43.4 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ்: டூ பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேஸர் மெக்கர்க், மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே, மன்வந்த் குமார், செதியுல்லா அடல். கையிருப்பு தொகை: ரூ.21.8 கோடி

குஜராத் டைட்டன்ஸ்: தசன் ஷனகா, ஜெரால்டு கோட்ஸி, கரிம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா, மகிபால் லோம்ரார். கையிருப்பு தொகை: ரூ.12.9 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆந்த்ரே ரஸ்ஸல், குயிண்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், மொயின் அலி, அன்ரிச் நோர்க்கியா, ரஹ்மனுல்லா குர்பாஷ், ஸ்பென்சன் ஜாண்சன், சேத்தன் சக்காரியா, லுவ்னித் சிசோடியா. கையிருப்பு தொகை: ரூ.64.3 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: டேவிட் மில்லர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப், ஆர்யன் ஜூயல், ராஜ்வர்தன் ஹங்கரேகர், யுவராஜ் சவுத்ரி. கையிருப்பு தொகை: ரூ.22.95 கோடி

மும்பை இந்தியன்ஸ்: பெவோன் ஜேக்கப்ஸ், சத்யநாராயண ராஜூ, ரீஸ் டாப்லி, கே.எல்.ஜித், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான், லிஸாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர். கையிருப்பு தொகை: ரூ.2.75 கோடி

பஞ்சாப் கிங்ஸ்: கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஷ், குல்தீப் சென், பிரவீன் துபே. கையிருப்பு தொகை: ரூ.11.5 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்: மகீஷ் தீக் ஷனா, வனிந்து ஹசரங்கா, பஸல்ஹக் பரூக்கி, குனால் ரத்தோர், அசோக் சர்மா, குமார் கார்த்திக் கேயா, ஆகாஷ் மத்வால். கையிருப்பு தொகை: ரூ.16.05 கோடி

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: லியாம் லிவிங்ஸ்டன், லுங்கி நிகிடி, மனோஜ் பன்தேஜ், மயங்க் அகர்வால், மோஹித் ராதீ, சுவஸ்திக் சிகாரா. கையிருப்பு தொகை: ரூ.16.4 கோடி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: ஆடம் ஸாம்பா, ராகுல் சாஹர், வியான் முல்டர், அபினவ் மனோகர், சச்சின் பேபி, அதர்வா டைடு, சிமர்ஜீத் சிங். கையிருப்பு தொகை: ரூ.25.5 கோடி

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset