நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

நெல்லை: 

விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரி மாதம் பேசி முடிவெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு பேசி வருகிறது. விஜய் பாஜவுடன் கூட்டணியில் இணைவார் என கூறுவோர் ஆசை நிறைவேறட்டும். விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும். 

கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset