நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா லோட் 11113இல் வசிக்கும் மக்களுக்கு முறையான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்; வீடுகளை காக்க தொடர்ந்து போராடுவோம்: சந்திரகுமார்

கம்போங் ஜாவா:

கம்போங் ஜாவா லோட் 11113இல் வசிக்கும் மக்களுக்கு முறையான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இதனால் வீடுகளை காக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று குடியிருப்பாளர்களின் பிரதிநிதி சந்திரகுமார் கூறினார்.

கம்போங் ஜாவா லோட் 11113இல் 56 வருடங்களுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 19 நில உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் டபிள்யூசிஇ நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனம் வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லாததால் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வீடுகளை உடைக்க  முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக வரும் நவம்பர் 24 அல்லது 25ஆம் தேதிகளில் இவ்வீடுகள் உடைப்படும் என கூறப்படுகிறது.

எங்களைப் பொறுத்தவரை இந்த வீடுகளை விட்டு வெளியேற தயாராக உள்ளோம்.

ஆனால் எங்களுக்கு முறையான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

அதே வேளையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும் வரை நாங்கள் இந்த வீடுகளை காலி செய்ய மாட்டோம்.

அதே வேளையில் மாநில அரசு எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை தருவதாக கூறுகிறது.

அந்த வீடுகளின் அளவு தற்போது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கூட வைக்க முடியாது.

ஆகவே எங்களுக்கு நிலம் தர வேண்டும். அந்த நிலத்தில் நாங்கள் வீடுகளை கட்டிக் கொள்கிறோம்.

இதுதான் எங்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கையை சிலாங்கூர் மாநில அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முடிவாக எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த வீடுகளை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset