நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சட்டமன்ற தேர்தலில் 73 தொகுதிகளில் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்

கோத்தா கினபாலு:

சபா சட்டமன்ற தேர்தலில் 73 தொகுதிகளில்596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹரூண் இதனை கூறினார்.

17ஆவது சபா மாநில தேர்தல் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 74 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

அதே நேரத்தில் வாரிசான் கட்சி மட்டுமே போட்டியிடும் 73 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

சபா ட்ரீம் பார்ட்டி 72 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து கபுங்கன் ரக்யாத் சபா (55), பார்ட்டி சொலிடாரிதி தனா எர்கு (46), தேசிய முன்னணி (45), தேசியக் கூட்டணி (42), பார்ட்டி கேசெஜஹ்தெரஹான் டெமோக்ரடிக் மஸ்யராகத் (40), உப்கோ (25), நம்பிக்கை கூட்டணி (25), சபா தேசிய கட்சி (20) என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகள் 20க்கும் குறைவான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset