நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோயோக் மக்களின் மகத்தான ஆதரவு; மடானி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

பெனாம்பாங்:

மோயோக் மக்களின் மகத்தான ஆதரவு, அவர்கள் மடானி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இன்று காலை பெனாம்பாங் கலாச்சார மண்டபத்தில் மோயோக் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

கெஅடிலான்  வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1,000 நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களுடன் நானும் உடன் சென்றேன்.

ஒரு சிறந்த,  துடிப்பான வரவேற்பு. இது சபாவின் மக்களின் உணர்வாகும்.

மோயோக் மக்கள் நிலையான தலைமை, மக்கள் சார்புடைய கொள்கைகள், மடானி அரசாங்கத்தின் கீழ் மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்புகிறார்கள்.

மேலும் மோயோக் மக்கள் தொடர்ச்சி, ஒற்றுமை, போட்டி, கண்ணியமான மாநிலமாக சபாவின் அபிலாஷைகளுக்கு ஏற்ப ஒரு திசையை விரும்புகிறார்கள் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கீழ் உள்ள மதானி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.

அவர் அடிக்கடி மாநிலத்திற்கு வருகை தருவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை வரும்போதும், சபாவின் வளர்ச்சியை வலுப்படுத்த தெளிவான உறுதிப்பாட்டையும் கொள்கையையும் கொண்டு வருகிறார்.

வலுவான ஆதரவை வழங்க ஒன்றிணைந்த நம்பிக்கை கூட்டணி கூறு கட்சிகளின் அனைத்து ஆதரவாளர்களையும் நான் வாழ்த்தி நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset