நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குரங்கை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது: போலிஸ்

கோத்தாபாரு:

குரங்கை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாச்சோக் போலிஸ் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் இதனை கூறினார்.

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலான பாச்சோக்கில் குரங்கை துன்புறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 24, 28 வயதுடைய இரண்டு ஆண்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் பாச்சோக் போலிஸ் தலைமையகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக வைரலான ஒரு வீடியோ தொடர்பாக பதிவு செய்ய நிலையத்தில் ஆஜரான பின்னர், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset