நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் முன் அமைதி போராட்டம்; நவம்பர் 19இல் நடைபெறும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

லோரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் முன் மாபெரும் அமைதி போராட்டம் நடைபெறும்.

மலேசிய லோரி ஓட்டுநர்கள் போராட்டக் குழு, நம்பிக்கை அரசு சாரா சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

லோரியில் அளவுக்கு அதிகமான எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்வதால் ஓட்டுநர்கள் ஜேபிஜே அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

அதே வேளையில் லோரி ஓட்டுநர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் நிற்க வைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு 8,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இதே போன்று லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் எந்தவொரு தீர்வும் இல்லை.

இதன் அடிப்படையில் தான் வரும் நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றம் முன் அமைதி ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

பெர்லிஸ் முதல் ஜொகூர் வரை அனைத்து லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். 

இந்த ஆர்பாட்டத்திற்கு மலாய்க்காரர்கள் ஆதராவாக உள்ளனர் ஆனால் இந்தியர்கள் நாட்டம் காட்டுவது இல்லை

ஆக அதிகமான இந்திய லோரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நிறைய வர வேண்டும்.

கிட்டத்தட்ட 27 கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். 

இம்மனு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் ஆகியோர் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில் முறையாக கோரிக்கை மனு கொடுக்கப்படும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset