செய்திகள் தமிழ் தொடர்புகள்
கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி
கோவை:
“21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள்.
தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் திமுகவின் சமூக நலத்துறை அமைச்சரே பேசியுள்ளார்.
ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:04 am
தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு சென்ற பயணிகள் அதிகாலையில் அவதி
November 12, 2025, 8:46 am
வாயில் வடை சுடுவது சுலபம், எஸ்ஐஆர் செயல்படுத்துவது கடினம்: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டம்
November 10, 2025, 4:39 pm
SIRக்கு எதிராக சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை அறிவிப்பு
November 9, 2025, 3:47 pm
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 8, 2025, 5:23 pm
