செய்திகள் விளையாட்டு
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் மேலோங்க சமூக அமைப்புகளின் பங்களிப்பு
ஈப்போ:
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒழுக்கம் நட்பன்புகளுடம் வாழ பல சமூக அமைப்புகள் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் ஈப்போவில் உள்ள kelab sukan rekreasi masyarakat cergas Ipoh எனும் அமைப்பும் தங்களின் நற்சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு மாணவர்களுக்கு தொடக்கமாக கால்பந்து போட்டியை நடத்தியது.
கடந்த இரண்டு மாத காலமாக கிந்தா வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இடையே இப்போட்டியை நடத்தியது்
அதன் இறுதி ஆட்டம் ஈப்போ உள்ள சங்கீத சபா தமிழ்ப்பள்ளி அருகில் உள்ள. கே. டி. எம். திடலில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்..இரண்டாவது இடத்தை ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
இந்த நிகழவில் வெற்றிப் பெற்ற குழுக்களுக்கு பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி முத்துச்சாமி போட்டியில் வெற்றிப் பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
அவர் முன்னதாக ஆற்றிய உரையில், மாநில அரசாங்கத்தில் இந்தியர் நலன் பிரிவு தலைவராக இருந்து வரும் அ. சிவநேசன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய இளைஞர்களின் வளர்ச்சியில. கவனம் செலுத்தி வருவதையும் எடுத்துரைத்தார்.
இதில் பேசிய நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் kelab sukan rekreasi masyarakat cergas Ipoh அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் த. இளங்கோ, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறன் கொண்ட மாணவர்களாக விளங்க விளையாட்டுத் துறை முக்கிய பங்காற்றுகிறது.
அதன் அடிபடையில் மாணர்களுக்கு விளையாட்டுத் துறையில் குறிப்பாக கால் பந்து துறையில் சிறந்த விளங்க இங்கு இப்போட்டியை நடத்தி வருவதாகவும் இன்று கிந்தா மாவட்ட நிலையில் இப்போட்டி நடத்தப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் மாநில நிலையில் இப்போட்டியை நடத்த திடமிடுள்ளதாக இளங்கோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 10:42 am
எப்ஏஎம் மேல்முறையீட்டுக்கு பிபாவிடமிருந்து இன்னும் பதில் இல்லை
October 31, 2025, 11:19 am
மெஸ்ஸியின் சம்பளம் 97 மில்லியன் ரிங்கிட்: ஹியூங் மின்னிம் சம்பளம் 53 மில்லியன் ரிங்கிட்
October 31, 2025, 11:04 am
ஒரு போலி வானளாவிய அரங்கம் மூலம் 50 மில்லியன் மக்களை எப்படி ஏமாற்ற முடியும்?
October 30, 2025, 10:35 am
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து அரங்கம்: சவூதி அரேபியாவின் கனவுத் திட்டம்
October 30, 2025, 9:58 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 30, 2025, 9:54 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண காலிறுதியாட்டத்தில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி
October 29, 2025, 11:11 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி
October 29, 2025, 11:10 am
