நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து அரங்கம்: சவூதி அரேபியாவின் கனவுத் திட்டம்

ரியாத்:

சவூதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

46,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி, காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள சவூதி அரேபியா, பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. 

அந்த வகையில், உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்துத் திடல் கட்ட செளதி திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். 

இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க சவூதி திட்டமிட்டுள்ளது.

2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சவூதி அரேபியாவின் விஷன் 2030 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset