நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏல மோசடியில் ஈடுபட்ட 26 நிறுவனங்களுக்கு 97.3 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது: அர்மிசான்

கோலாலம்பூர்:

ஏல மோசடியில் ஈடுபட்ட 26 நிறுவனங்களுக்கு  97.3 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிசான முகமது அலி இதனை கூறினார்.

மலேசிய போட்டி திறன் ஆணையம்  மொத்த டெண்டர் மதிப்பு 540.72 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏல மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகக் கண்டறிந்தது.

இதன் அடிப்படையில்  26 நிறுவனங்களுக்கு அவ்வாணையம்  97.3 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

தற்போது 2.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள டெண்டர்கள் தொடர்பாக 563 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 14 ஏல மோசடி வழக்குகள் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இது மலேசிய போட்டி திறன் ஆணையம் சாதனையாகும்.

நாங்கள் அமலாக்கத்தை மேற்கொள்ளும்போது, ​​பல வழக்குகளைக் காண்கிறோம். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகளைக் கோருகிறோம்.

இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீடு உள்நாட்டு வர்த்தக,  வாழ்க்கைச் செலவின அமைச்சுக்கு மட்டுமல்ல,

ஏல மோசடியைத் தடுப்பதில் ஒரு முக்கிய திறனான அமலாக்கத்தை அதிகரிக்க ஆணையத்திற்க்கும்  வழங்கப்படுகிறது  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset