நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது

கோலாலம்பூர்:

புரோட்டான் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மலேசியாவின் முதல் மலிவு விலை மின்சார கார்  புரோட்டான் இ.மாஸ் கார் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை 59,800 ரிங்கிட் முதல் தொடங்குகிறது.

இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் இக்கார் வழங்கப்படும்.

பிரைம் வேரியண்டின் விலை 59,800 ரிங்கிட் முதல் காப்பீடு இல்லாமல் விலையிலும், பிரிமியம் வேரியண்டின் விலை 72,800 ரிங்கிட் வரையிலும் உள்ளது.

இன்னும் சுவாரஸ்யமாக, டிசம்பர் 31 வரையிலான வரையறுக்கப்பட்ட சலுகையில் புரோட்டான் 3,000 ரிங்கிட் வெளியீட்டு தள்ளுபடியை வழங்குகிறது.

இதனால் இக்காரின்  விலை 56,800 ரிங்கிட் (பிரைம்), 69,800 ரிங்கி (பிரிமியம்) ஆகக் குறைகிறது.

அக்டோபர் 4 ஆம் தேதி முன்பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, வெறும் 99 ரிங்கிட் முன்பதிவு கட்டணத்துடன் 5,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

புரோட்டான் இ.மாஸ் 5 இன் அறிமுகம் மலேசியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் புரோட்டானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று புரோ நெட் தலைமை நிர்வாக அதிகாரி ஜாங் கியாங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset