நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தலைவர்களும் கட்சியின் ஒழுங்கு வாரியத்தால் இன்று அழைக்கப்பட்டனர்.

அவர்கள் பெர்சத்து பெண்டாங் தொகுதித் தலைவரும் சுங்கை தியாங் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் ரசாக் காமிஸ், சிப்பாங் தலைவத் டத்தோ முகமட் சுஹைமி கசாலி, பூச்சோங் தலைவர் முகமட் ஷுக்கோர் முஸ்தபா ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சத்து தலைமையகத்தில் உள்ள ஒழுங்குமுறை வாரியத்திற்கு அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் முகமட் ஷுகோர், தானும், இரண்டு பெர்சத்து தொகுதித் தலைவர்களும் ஒழுங்குமுறை வாரியத்திற்கு அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகவும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கவும் வலியுறுத்தி சத்திய பிரமாணப் பத்திரத்தில்  கையெழுத்திட்ட சுமார் 120 பெர்சத்து தொகுதித் தலைவர்களில் இவர்களும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset