செய்திகள் மலேசியா
2025ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜிபிஎஸ் வருவாய் 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயரும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
இலக்கவியல் முன்னேற்றம் ஜிபிஎஸ் தொழில் துறை முதலீடுகளில் எதிரொலிக்கிறது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இதனை கூறினார்.
அண்மைய காலமாக தொழில்நுட்ப புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தின் காரணமாக உலக அரங்கில், மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அதிவளர்ச்சியடைந்துள்ளது.
இது ஜிபிஎஸ் ஆசியான் உச்ச நிலை மாநாடு 2025 இதற்கு சான்று பகர்கிறது.
ஜிபிஎஸ் 5.0: மனிதரை மையப்படுத்திய, செயற்கை நுண்ணறிவின் வழி, பெறப்படும் விளைவை மையாமாக கொண்டது என்கிற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
அனைத்துலக வர்த்தக சேவை (ஜிபிஎஸ்) என்பது உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த சேவைகளின் தொகுப்பாகும்.
இதில் நிதி, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை போன்றவை அடங்கும்.
இந்த உச்ச நிலை மாநாடு இரண்டு முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.
2025இன் ஜிபிஎஸ் மலேசியா அரையாண்டு அறிக்கை, மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அமைப்புக்கும், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன இந்த மாநாட்டில் சிறப்பம்சங்களாகும்.
மலேசியாவில் 2022ஆம் ஆண்டிலிருந்து ஜிபிஎஸ் நிறுவனங்கள் 66.8% அதிகரித்திருக்கும் நிலையில், இதனால் தற்போது மொத்தம் 749 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மூலதன முதலீடுகள் 13.5 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், 2021ஆம் ஆண்டு 0.73 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 2024ஆம் ஆண்டில் 9.87 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது.
இதன் பலனாக, 36,000க்கும் அதிகமான உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் ஜிபிஎஸ் வருமானம் 28.14 பில்லியன் ரிங்கிட் உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது மலேசியா, உலகளவில் Global Services Location Indexஇல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதோடு, டிஜிட்டல் போட்டியாற்றல் திறன், புத்தாக்கம் மற்றும் முதலீட்டின் நம்பிக்கை ஆகியவற்றில், ஆசியான் நாடுகளிடையே மலேசியா, தொடர்ந்து முதல் மூன்று இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த மத்திய ஆண்டு அறிக்கை, குறிப்பிட்ட துறையின் சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலப் பாதையை தெளிவாகக் காட்டக்கூடிய முன்னேற்ற குறியீடாக விளங்குகிறது.
அதோடு இந்த அறிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியா செயற்கை நுண்ணறிவு நாடாக உருமாற்றம் கொள்வதை துரிதப்படுத்தும்.
அதோடு இந்த மாநாட்டில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் தொழில் துறை, கல்வித் துறை இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வருங்காலத்தில் GBS அமைப்பில் திறன்சார் வல்லுனர்களை உருவாக்கும்.
எனவே, இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜிபிஎஸ் மலேசியாவை நான் பாராட்ட விரும்புகிறேன்.
அதைவிட முக்கியமாக, மலேசியாவை ஒரு இலக்கவியல் நாடாக மாற்றுவதில் அவர்களை நான் மதிக்கிறேன் என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm
மொஹைதின் மருமகனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர போலிசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன: சைபுடின்
October 30, 2025, 10:01 pm
புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது
October 30, 2025, 9:59 pm
தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக மட்டத்தில் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 30, 2025, 9:58 pm
செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
October 30, 2025, 8:13 pm
டத்தோ விடாவுக்குச் சொந்தமான 3 கார்கள் உட்பட 727 உடைமைகள் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலம் விடப்பட்டன
October 30, 2025, 8:12 pm
பெர்சத்துவில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
October 30, 2025, 8:11 pm
ஆசியான் வட்டார நாடுகளுடனான மலேசியாவின் உறவுகளை உச்ச நிலை மாநாடு வலுப்படுத்தியுள்ளது
October 30, 2025, 8:09 pm
