நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

சுபாங் ஜெயா:

இங்குள்ள ஜாலான் யூஎஸ்ஜே 9/5கே இல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே தொப்புள் கொடியுடன் உயிருடன் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

காலை 10.27 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலிசாருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில் நீல நிற பிளாஸ்டிக் பையில் ஆரோக்கியமான பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை ஆடையின்றி காணப்பட்டது. மேலும் அவளது பிறப்புறுப்பில் இன்னும் இரத்தப்போக்கு இருந்தது. 

குழந்தை மேல் சிகிச்சைக்காக ஷாஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

பரிசோதனை முடிவுகளில் குழந்தையின் எடை 2.6 கிலோகிராம் (கிலோ), 43 சென்டிமீட்டர் நீளம் இருந்தது கண்டறியப்பட்டது.

குழந்தை இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset