நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சைபுடின் நீக்கம்

கோலாலம்பூர்:

பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்.

தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.

இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சைபுடின் அப்துல்லாஹ், பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து முஹைதின் யாசின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை விடுத்தார்.

இதை தொடர்ந்து, பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சைபுடினுக்கு பதிலாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அவர் வகித்த பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார் என்று அவர் அறிவித்தார்.

அவர் பகாங் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

சைபுடினைத் தவிர, பெம்பான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் யாட்சில் யாகூப் மலக்கா தேசியக் கூட்டணி தலைவராக இருந்தவரும் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக தேசியக் கூட்டணி மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாதி சம்சுடின் நியமிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset