நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்

சென்னை:

கரூர் கடந்த மாதம் செப்டம்பர் 27ந் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த இந்தியவை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம் நடந்து இன்றோடு ஒரு மாதமாகிறது.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூர் வந்து உங்களை சந்திப்பேன்.

வாழ்நாள் வரை நான், உங்கள் குடும்பத்தின் ஒருவனாக உங்களுடன் இருப்பேன்.

உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன்,

வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று விஜய் உறுதி அளித்துள்ளார்.

அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட விஜய் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset