நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேக்ஸ் விரைவுச்சாலை வழியாக டிரம்பின் வாகனம் அணிவகுத்து செல்லும் காணொளி வைரலானது: மலேசியாவின் உள்கட்டமைப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது

கோலாலம்பூர்:

மேக்ஸ்  விரைவுச்சாலை வழியாக டிரம்பின் வாகனம் அணிவகுத்து செல்லும் காணொளி வைரலாகி உள்ளது.

இதன் மூலம் மலேசியாவின் உள்கட்டமைப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்த பயணத்திற்காக மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் அவரது வாகன அணிவகுப்பாக மேக்ஸ் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் காணொளி உலக கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், பாராட்டையும் பெற்றுள்ளது.

டிரம்பின் சிறப்பு உதவியாளரும் தகவல் தொடர்பு ஆலோசகருமான மார்கோ மார்ட்டின்,

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து  தலைநகருக்குச் செல்லும் வழியில் மூன்று வழிச்சாலை நெடுஞ்சாலையில் அதிபரின் வாகன அணிவகுப்பு சீராக நகர்வதைக் காட்டும் 13 வினாடி வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.


ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கு செல்லும் வழியில் மலேசியா வழியாக அதிபர் டிரம்பின் வாகன அணிவகுப்பு என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ கிளிப் இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset