செய்திகள் மலேசியா
1 எம்டிபி வாரியத்திற்கு நஜிப்பிடமிருந்து நேரடி உத்தரவுகள் எதுவும் இல்லை
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் நிறுவனம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் 1எம்டிபி வாரிய உறுப்பினர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் பிறப்பிக்கவில்லை.
நஜிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் வான் அஸ்வான் ஐமான் வான் ஃபக்ருதீன் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
துன் ரசாக் எக்ஸ்சேஞ்சை உருவாக்க ஆபர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஜேஎஸ் உடனான முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சியைப் பற்றி விவாதித்து மதிப்பீடு செய்தது 1எம்டிபி வாரியம் தான்.
கடந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, 2012 முழுவதும் வாரிய உறுப்பினர்கள் இந்த திட்டத்தை பலமுறை மதிப்பாய்வு செய்தனர்.
தனது இறுதி வாதத்தில் நஜிப் அழுத்தம் கொடுத்ததாக 1எம்டிபியின் இரண்டு முன்னாள் இயக்குநர்களான இஸ்மி இஸ்மாயில், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரோல் அஸ்ரல் இப்ராஹிம் ஹல்மி ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரங்கள் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகள் என்று அஸ்வான் வலியுறுத்தினார்.
முன்னாள் தலைவர் சே லோடின் வோக் கமருதீன், அத்தகைய அணுகுமுறை இருப்பதை மறுத்தார்.
மேலும் அனைத்து முடிவுகளும் கவனமாக ஆலோசித்த பின்னரே எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:32 pm
இந்த ஆண்டு சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பெறப்பட்டுள்ளன
October 27, 2025, 7:31 pm
மொஹைதினை வீழ்த்த சதி செய்யாமல், பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்: சஞ்ஜீவன்
October 27, 2025, 1:54 pm
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை: அந்தோனி லோக்
October 27, 2025, 1:45 pm
