நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பெறப்பட்டுள்ளன

ஷாஆலம்:

இந்த ஆண்டு இதுவரை மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,219 தவறான நடத்தை புகார்களை சிலாங்கூர் கல்வி இலாகா பெற்றுள்ளது.

அவற்றில் 265 புகார்கள் பகடிவதை தொடர்பானவை.

41 வழக்குகளுக்கான விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் 32 வழக்குகள் வன்முறை குற்றங்களுடன் தொடர்புடையவை.
மீதமுள்ளவை பகிடிவதை தொடர்புடையவை.

ஆனால், தவறான நடத்தை புகார்களின் எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய விகிதமே என்பதால், சிலாங்கூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பாக இருந்தன.

சிலாங்கூர் துணை போலிஸ் தலைவர் ஜைனி அபு ஹாசன் இதனை தெரிவித்தார்.

சிலாங்கூரில் எங்களிடம் சுமார் 997,000 மாணவர்கள் உள்ளனர். 6,000 ஆசிரியர்களால் அதை நிர்வகிப்பது எளிதல்ல.

எனவே, மாணவர் எண்ணிக்கையுடன் தவறான நடத்தை புகார்களின் விகிதம் 0.0012% மட்டுமே.

இது சிலாங்கூரில் பள்ளி பாதுகாப்பு மிகவும் நன்றாக இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset