நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆசியான் முயற்சிகளில் மியான்மாரின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது: பிரதமர்

கோலாலம்பூர்:

உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆசியான் முயற்சிகளில் மியான்மாரின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மியான்மரில் நிலவும் நெருக்கடி குறித்து ஐந்து அம்ச ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதில் வட்டார கூட்டமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருவதால், மியான்மாரின் இராணுவத் தலைமை ஆசியானுடன் ஈடுபட்டு ஒத்துழைத்து வருகிறது.

இன்று கிழக்கு ஆசிய உச்ச நிலை மாநாட்டில் தனது உரையில்,

மியான்மாரின் இராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங், அவர்களின் சந்திப்பின் போது ஆசியானுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

ஆசியானின் போர்நிறுத்தம் மற்றும் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இராணுவ ஆட்சிக்குழுத் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

மேலும் இனம் அல்லது அரசியல் சார்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யும் மியான்மாரில் உள்ள மலேசிய கள மருத்துவமனைக்கு தடையின்றி மனிதாபிமான அணுகலை அனுமதித்ததாக  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset