நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது 

நியூயார்க்:

இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகள் தொடர்பில் சட்டவிரோத சூதாட்டம் இடம்பெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் NBA எனும் தேசியக் கூடைப்பந்து அமைப்பின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் உட்பட 30க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பிரபல விளையாட்டாளர்களும் அடங்குவர். 

விளையாட்டின் முடிவை மாற்றியமைக்க சூதாட்டக்காரர்கள் விளையாட்டாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியதாக நம்பப்படுகிறது.

சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளில் poker எனப்படும் விளையாட்டும் அடங்கும்.

பிரபல விளையாட்டாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு என்று சொல்லிப் பொதுமக்கள் கவரப்பட்டனர்.

முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட நிலையில்  பல மில்லியன் டாலர் ஏமாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதில் நியூயார்க்கின் 4 பெரிய குண்டர் கும்பல்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சூதாட்ட நடவடிக்கைகள் பல ஆண்டுகளாய் நடந்ததாகக் கூறப்படுகிறது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset