நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிந்து போராடி தோல்வி

பாலி:

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் லீக் போட்டியில் இந்தியாவின் சிந்து போராடி தோல்வியடைந்தார்.

இந்தோனேஷியாவில்,  வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. 
பெண்கள் ஒற்றையர் ஏ பிரிவுக்கான முதலிரண்டு லீக் போட்டியில் வெற்றி பெற்று  நடப்பு உலக சாம்பியன் சிந்து, ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்திருந்தார்.

மூன்றாவது லீக் போட்டியில் சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவோங் மோதினர். 
முதல் செட்டை 12-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-19 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர், 14-21 எனக் கோட்டைவிட்டார். 

ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 12-21, 21-19, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.   

ஆண்கள் ஒற்றையர்  பி பிரிவு, 3ஆவது லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜீ ஜியா லீ மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset